சனி, 5 மார்ச், 2016

தற்புகழ்ச்சி தேவையா?

குத்துச்சண்டை எல்லாம் ஒரு விளையாட்டா? என்று கேட்பவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், உலக அளவில் கோடிக் கணக்கான ரசிகர்களைக் கொண்ட பிரபலமான விளையாட்டு அது என்பதில் சந்தேகம் இல்லை. ஜார்ஜ் போர்மேன், முகமது அலி, மைக் டைசன், ஹோலிபீல்டு போன்ற நட்சத்திரங்கள் பாக்சிங் ரிங்கில் ஜொலித்தபோது, அந்த விளையாட்டின் புகழ் உச்சத்தில் இருந்தது. இப்போது மேரி கோம், விஜேந்தர் சிங் என்றால் இந்திய ரசிகர்களுக்கும் பாக்சிங் பற்றி நினைவுக்கு வரலாம்.இந்திய மீடியா பெரிதாக கண்டுகொள்வதில்லை என்றாலும், உலக அளவில் தொழில்முறை பாக்சிங்கின் மவுசு நீடிக்கத்தான் செய்கிறது. இன்று இந்த விளையாட்டில் கொடிகட்டி பறப்பவர் தான் பிளாயிட் மேவெதர் ஜூனியர். அமெரிக்காவை சேர்ந்தவர். பல்வேறு பிரிவுகளில் உலக சாம்பியன் பட்டம். 47-0 என மிரட்டலான வெற்றிக் கணக்கு. உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர் என்ற பெருமை. சொந்தமாக 100 கார், 2 ஜெட் விமானம்! இவரோடு பிலிப்பைன்சை சேர்ந்த மானி பாக்கியாவ் மோதும் போட்டியை இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய குத்துச்சண்டை சவால் என்கிறார்கள். இந்த போட்டியை ஆன் லைனில் பார்ப்பதற்காக காசு கட்டி காத்திருக்கிறார்கள் கோடிக் கணக்கான ரசிகர்கள். வெற்றியோ, தோல்வியோ... இரண்டு வீரர்களுக்குமே பல கோடி ரூபாய் பரிசுத் தொகை காத்திருக்கிறது.இதில் எல்லாம் எந்த பிரச்னையும் இல்லை. மானி பாக்கியாவ் எப்போதும் போல அமைதி காக்க, வாய்த்துடுக்கில் வல்லவரான பிளாயிட் மேவெதர்முகது அலியை விடவும் உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரன் நான் தான். பாக்சிங்கிற்காக அவரை விட அதிகம் செய்திருக்கிறேன்என்று தற்புகழ்ச்சியில் இறங்கியது தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவருக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் முகமது அலியின் மகள் லைலா அலி. தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையான லைலா, எட்டு ஆண்டுகளில் 24-0 என்ற வெற்றிக் கணக்குடன் ஓய்வு பெற்றவர். ‘மேவெதர் ஒரு சின்னப் பையன். என் அப்பாவின் முன் நிற்கக் கூட அவருக்கு தகுதியில்லை. பணமும், ஆள் பலமும் இருந்தால் போதும் என்று நினைக்கிறார். சரியான மன நோயாளிஎன்று தாக்கி இருக்கிறார். முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியனும், சர்ச்சைகளின் நாயகனுமான மைக் டைசனும்தானே தலைசிறந்த வீரன்என்ற மேவெதரின் சுயபுராணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பாக்சிங்கில் நீங்கள் பெரிய ஆள் என்பதை நீங்களே சொல்லிக் கொள்ளக் கூடாது. உலகம் அதை உறுதிப்படுத்த வேண்டும். ரசிகர்கள் போற்றிப் புகழ வேண்டும். மானி பாக்கியாவ்வை வீழ்த்தினால் கூட! என்பதை மேவெதர் புரிந்து கொள்வாரா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக