சனி, 5 மார்ச், 2016

அணி மாற வேண்டாம்

இந்தியன் சூப்பர் லீக் 20 ஓவர் போட்டித் தொடரின் 2016 சீசனில், புதிதாக இரண்டு அணிகள் உருவாக உள்ளன. அணி நிர்வாகிகள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் புது வரவை தவிர்க்க முடியாத சூழ்நிலை.சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்த கேப்டன் டோனி, ரெய்னா, அஷ்வின் போன்ற வீரர்கள் அணி மாற வேண்டிய கட்டாயம். டோனி, மஞ்சள் சீருடை என்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்திருக்கும் அபிமானத்தை மாற்ற முடியுமா?ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு ஒட்டுமொத்த சொந்தக்காரர்கள் என்றால்அது ரசிகர்கள் மட்டுமே. அவர்களால் தான் உலகின் பணக்கார விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக ஐபிஎல் முத்திரை பதித்திருக்கிறது. தங்களின் அபிமான நட்சத்திர வீரர்கள் வேறு அணிகளுக்காக விளையாடும்போது, ரசிகர்கள் அதை எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என்பதும் கேள்விக்குறியே. இந்த வீரர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடாவிட்டால் பெரிய இழப்பு ஏதும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அவர்களுக்கான ஊதியத்தை சம்பந்தப்பட்ட அணிகளின் உரிமையாளர்கள் உறுதிசெய்து தக்கவைத்துக் கொண்டால், இரண்டு சீசனுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும்போது ரசிகர்களின் அமோக ஆதரவு நிச்சயம்.அதை விடுத்து வெவ்வேறு அணிகளுக்காக விளையாட முடிவு செய்வது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. எட்டு அணிகள் பங்கேற்கும் தொடரை நடத்துவதற்கே இரண்டு மாதம் தேவைப்படும் நிலையில், 2018ல் இருந்து பத்து அணிகளை மோதவிடுவது ஐபிஎல் தொடரின் மீதான ஈர்ப்பை நிச்சயம் நீர்த்துப்போகச் செய்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக