சனி, 30 அக்டோபர், 2010

முத்து முத்தாய் முத்தையா முரளிதரன்…

இந்திய அணியுடன் காலே சர்வதேச மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டுடன், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தனது கடைசி டெஸ்டின் கடைசி பந்தில் 800வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்த முரளி பற்றிய சுவாரசியமான புள்ளி விவரங்களின் தொகுப்பு…
+ இலங்கையின் கண்டி நகரில் 1972, ஏப்ரல் 17ம் தேதி பிறந்தவர். பூர்வீகம் தென் தமிழகம். மூன்று தம்பிகள்.
+ தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர், 14வது வயதிலேயே சுழலுக்கு மாறிவிட்டார்.
+ 20 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் (1992).
+ இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளில் களமிறங்கிய ஒரே தமிழர்.
+ டெஸ்ட் (800) மற்றும் ஒருநாள் போட்டிகளில் (515) அதிக விக்கெட் வீழ்த்தி முதலிடம். பேட்டிங்கில் சச்சின் போல பந்துவீச்சில் பல உலக சாதனைக்கு சொந்தக்காரர்.
+ டெஸ்டில் சிறந்த பந்துவீச்சு: ஒரு இன்னிங்சில் 9/51, ஒரு போட்டியில் 16/220, 5 விக்கெட் 67 முறை, 10 விக்கெட் 22 முறை.
+ தொடர்ச்சியாக 4 டெஸ்டில் தலா 10 விக்கெட் வீழ்த்திய சாதனையை 2 முறை நிகழ்த்தியுள்ளார்.
+ டெஸ்ட் விளையாடும் எல்லா அணிகளுக்கு எதிராகவும் 50+ விக்கெட் கைப்பற்றிய ஒரே பந்துவீச்சாளர்.
+ டெஸ்டில் அதிக முறை ‘தொடர் நாயகன்’ விருது (11) பெற்ற வீரர்.
+ அதிரடியாக பேட்டிங் செய்யக் கூடியவர் என்றாலும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் (59) இவர்தான்.
+ 1995ல் ஆஸி. அணியுடனான டெஸ்டில், முரளிதரன் பந்தை எறிவதாக நடுவர் டேரல் ஹேர் 5 முறை எச்சரித்தார். இலங்கை கேப்டன் ரணதுங்கா ஆட்டத்தை நிறுத்திவிட்டு சக வீரர்களுடன் பெவிலியன் திரும்பி ஆலோசிக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
+ பந்தை எறிவதாக சர்ச்சை தொடர்ந்ததால் 4 முறை ‘பயோமெட்ரிக்ஸ்’ சோதனை நடத்தப்பட்டது. அதில், முரளியின் பந்துவீச்சு முறையாக இருப்பதாக ஐசிசி அறிவித்தது.
+ இயற்கையாகவே இவரது வலது முழங்கை சற்று வளைந்து இருக்கும்.
+ தூஸ்ரா, டாப் ஸ்பின்னர், பிலிப்பர்… போன்ற இவரது வித்தியாசமான பிரம்மாஸ்திரங்கள் எந்த பேட்ஸ்மேனையும் திணறச் செய்யும். எப்படிப்பட்ட களத்திலும் பந்தை சுழற்றி திரும்பச் செய்யக் கூடியவர்.
+ சென்னை மருமகன். மலர் மருத்துவமனை டாக்டர் ராமமூர்த்தி தம்பதியினரின் மகள் மதிமலரை மணந்துள்ளார். மகன் நரேன்.   

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக