அன்பே அன்பே
பலகோடி மைல்கள்
பலகோடி யுகங்கள்
ஒளி வேகத்தில் ஒளி ஆண்டுகள்
ஓடிப் போகுமே (பால் வீதியில்)
கருந்துளைகள் நாம் கடப்போம்
அன்பே அன்பே
கண்மூடி நடப்போம்
கைகோர்த்து சிலிர்ப்போம்
எடையின்றி மிதப்போமே (பால் வீதியில்)
எல்லைகள் ஏதுமில்லை
அன்பே அன்பே
இது காதல் தேசம்
தொல்லைகள் ஒன்றுமில்லை
இது சூன்ய தேகம்
இதழ் ரசம் குடித்தே
யுக தாகம் தீர்ப்போமா (பால் வீதியில்)
பிரபஞ்சம் வெடித்து
அன்பே அன்பே
சூரியன் எரிந்து சாம்பலாய் உதிரும்
கிரகங்கள் மோதி சிதறிடும் போதும்
'நானோ' துகளாய்
நானும் நீயும் நிலைப்போமே...(பால் வீதியில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக