வெள்ளி, 29 அக்டோபர், 2010

காதல்

பேருந்து விரைகிறது
அழகிய கண்கள் அவளுக்கு!
எனைத்தான் பார்க்கிறாள்!!
மெளன மொழியில் - ஓர்
மோகன உரையாடல்
உன்னுயிர் நான் என்று
என்னுயிர் நீ என்று....
ஐயோ....
அவள் இறங்கப் போகிறாள்
என் இதயத்துடன்
அவள் இறங்கிப் போகிறாள்
படிகளிலே ஒரு மின்னல்
தேவதை ஒன்று
இருக்கையில் வந்தமர்கிறது...
அழகிய கண்கள் இவளுக்கும்!
என்னைத்தான் பார்க்கிறாள்!!
மெளன மொழியில் - ஓர்
மோகன உரையாடல்
பேருந்து விரைகிறது...

-பா. சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக