ஒருநாள் மற்றும் டி20
போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்
பதவியில் இருந்து
விலகி, இளம்
வீரர் விராத்
கோஹ்லிக்கு வழிவிட்டிருக்கிறார் எம்.எஸ்.டோனி.
சரியான நேரத்தில்
எடுக்கப்பட்ட மிகச் சரியான முடிவு இது.
இந்திய அணியின் மிக
வெற்றிகரமான கேப்டன், டி20 உலக கோப்பை,
ஒருநாள் போட்டி
உலக கோப்பை,
சாம்பியன்ஸ் டிராபி என சர்வதேச கிரிக்கெட்
கவுன்சில் நடத்தும்
மூன்று பெரிய
தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற ஒரே
கேப்டன் என்ற
பெருமையுடன், டெஸ்ட் அரங்கில் இந்திய அணியை
முதலிடத்துக்கு முன்னேற வைத்ததும் டோனியின் மகத்தான
சாதனை என்பதில்
சந்தேகமில்லை.
நெருக்கடியான தருணங்களிலும் பதற்றம்
அடையாமல் மிக
நிதானமாக செயல்பட்டு
அணியை வெற்றிப்
பாதைக்கு திருப்புவதில்
வல்லவர் என
தனி முத்திரை
பதித்தவர். கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர்
என மூன்று
வகை பொறுப்பின்
சுமையையும் சுலபமாக சமாளித்தவர் என்று டோனியின்
சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து
ஓய்வு பெற்றாலும்,
ஒருநாள் மற்றும்
டி20 போட்டிகளில்
கேப்டனாக நீடித்து
வந்தார். அடுத்த
உலக கோப்பை
போட்டி வரை
அவரே கேப்டனாக
தொடர வேண்டும்
என்று சில
பிரபலங்கள் வலியுறுத்தி வந்த நிலையில், திடீரென
பதவி விலகுவதாக
அறிவித்து அதிர்ச்சி
அளித்திருக்கிறார்.
கோஹ்லி தலைமையிலான டெஸ்ட்
அணி வெற்றிகளைக்
குவித்து வருவது
அவரது நிலையில்
மாற்றத்தை ஏற்படுத்தி
இருக்க வேண்டும்.
இந்திய அணியின்
எதிர்காலம் திறமையான, மன வலிமை மிக்க
வீரரின் கையில்
ஒப்படைக்கப்பட்டிருப்பதை டோனி நன்கு
உணர்ந்ததால் தான், நிர்ணயிக்கப்பட்ட ஓவர் போட்டிகளிலும்
கோஹ்லி தலைமையேற்கும்
வகையில் தனது
கேப்டன் பொறுப்பை
ராஜினாமா செய்திருக்கிறார்.
சச்சின், டிராவிட், சேவக்,
கம்பீர் போன்ற
அனுபவ வீரர்கள்
இளைஞரான டோனிக்கு
வழிவிட்டு, அவரது தலைமையின் கீழ் விளையாடியதைப்
போல, தற்போது
கோஹ்லியிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு சாதாரண வீரராகத்
தொடர்கிறார். இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி
தேர்வு நடப்பதற்கு
முன்பாகவே தனது
விலகல் முடிவை
கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தது மிகச் சரியான
முடிவு.
இதனால் மூன்று வகை
போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக கோஹ்லி
பொறுப்பேற்க முடிந்திருக்கிறது. இனி எந்தவிதமான சுமையோ
நெருக்கடியோ இல்லாமல் டோனி தனது இயல்பான
அதிரடி ஆட்டத்தை
வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக