இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளிடையே
நடந்து வரும்
டெஸ்ட் போட்டி
கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான விருந்தாகி இருக்கிறது.
வெற்றியை வசப்படுத்துவதற்காக
இரு தரப்பும்
களத்தில் ஆக்ரோஷமாக
மோதி வருவதால்
ஆட்டத்தில் அனல் பறக்கிறது.
எதிரணி வீரரின் கவனத்தை
சிதைக்கும் வகையில் கிண்டலடித்து வார்த்தைப்போருக்கு இழுக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.வழக்கமாக,
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தான் இதை
ஒரு வியூகமாகவே
உபயோகிப்பார்கள். வம்புக்கு இழுப்பதில் அவர்களுக்கு டாக்டர்
பட்டமே கொடுக்கலாம்
என்ற அளவுக்கு
அவர்களின் அட்டூழியம்
கொடிகட்டிப் பறக்கும்.
கிளென் மெக்ராத், ஸ்டீவ்
வாஹ், ஷேன்
வார்ன், கில்கிறிஸ்ட்
போன்ற மகத்தான
வீரர்கள் கூட,
இந்த ‘ஸ்லெட்ஜிங்’
ஆயுதத்தை பிரயோகிக்க
தயங்கியதே இல்லை.நடப்பு தொடரில்
இந்திய வீரர்களும்
இதை கையாளத்
தொடங்கி இருக்கிறார்கள்.
குறிப்பாக, கேப்டன் கோஹ்லி இதில் சற்று
தீவிரமாகவே இறங்கியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர்கள் எதிராபாராத வகையில் ஆதிக்கம் செலுத்துவதும்,
அவர்களை சமாளித்து
ரன் குவிக்க
முடியாமல் இந்திய
பேட்ஸ்மேன்கள் திணறுவதும் கோஹ்லியை விரக்தியில் ஆழ்த்தியிருக்க
வேண்டும். அந்த
பாதிப்பில் தான் ஆஸி. கேப்டன் ஸ்டீவன்
ஸ்மித் மற்றும்
தொடக்க வீரர்
ரென்ஷாவை கேலியும்,
கிண்டலுமாக வெறுப்பேற்றி இருக்கிறார். நல்ல வேளையாக
நிலைமை எல்லை
மீறவில்லை. நடுவர்களும் சிறப்பாக செயல்பட்டு களத்தில்
பெரிய அசம்பாவிதம்
ஏதும் நிகழாமல்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘கோஹ்லி மிகச் சிறந்த
பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை. அவரது
ஆக்ரோஷமான செயல்பாடு
மற்ற வீரர்களையும்
துடிப்பாக விளையாட
ஊக்குவித்தது உண்மை தான். ஆனால், அவர்
கேப்டன் பொறுப்பேற்ற
பிறகும் அதே
வகையான அணுகுமுறையை
கையாள்வது சரியல்ல.
இதனால் சக
வீரர்களுக்கும் நெருக்கடி அதிகரித்து விடுகிறது. அஷ்வின்
முகத்தை பார்த்தாலே
அது தெளிவாகத்
தெரிகிறது. கோஹ்லி மீதான மரியாதை கொஞ்சம்
கொஞ்சமாகக் குறைந்து வருகிறது’ என்கிறார் ஆஸி.
முன்னாள் விக்கெட்
கீப்பர் இயான்
ஹீலி.
‘கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம்.
இதை பெரிதுபடுத்த
வேண்டியதில்லை. உண்மையில் இரண்டு கேப்டன்களுமே தங்களின்
பொறுப்பை உணர்ந்து
சரியாகவே செயல்படுகிறார்கள்.
அதனால் தான்
நிலைமை கட்டுக்குள்
இருக்கிறது’ என்கிறார் மற்றொரு பிரபலமான கேடிச்.
இரு அணி வீரர்களுமே
இது போன்ற
தேவையற்ற விஷயங்களில்
கவனம் செலுத்தாமல்,
தங்களின் திறமை
மீது நம்பிக்கை
வைத்து விளையாடுவார்கள்
என எதிர்பார்க்கலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக