சனி, 25 டிசம்பர், 2010

மத்திய சென்னையில் மாறன் கணை மழுங்குமா?

மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் களம் காணும் தி.மு.. வின் முரசொலி மாறனை வீழ்த்துவதற்குப் புதிய வியூகம் அமைக்கப்பட்டு திரை மறைவு நாடகம் அரங்கேறுவதாகப் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.. வட்டாரத்தில் கவலை ரேகைகள். இந்தப் புதிய மாற்றத்திற்குக் காரணம் மாற்று அணி சார்பாகப் போட்டியிடவிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் திடீரென்று விலகிக்கொண்டு விட்டதுதான்.

தற்போது இத் தொகுதியில் .மா.கா. போட்டியிடும் என்று தெரிகிறது. முரசொலி மாறனை எதிர்த்து .தி.மு.. கூட்டணி சார்பில் அப்துல் லத்தீப் நிறுத்தப்பட்டுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் இரண்டு லட்சத்துக்கும் கூடுதலான முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்றனர்.

இவர்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றுவதன் மூலமாக முரசொலி மாறனை வீழ்த்திவிடலாம் என்று ஜெயலலிதா கணக்கு போட்டார். ஆனால் .மா.கா. கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் நிறுத்தப்பட்டது .தி.மு.. கூட்டணிக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. முஸ்லிம் வாக்காளர்களின் வாக்குகள் இரு பிரிவாக பிரிக்கப்படும் என்பதால் முரசொலி மாறன் எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என்பது தெளிவாகத் தெரிந்தது. தி.மு.. வும் உற்சாகமாக இருந்தது. இந்நிலையில்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திடீரென மத்திய சென்னை தேர்தல் களத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு மத்திய சென்னை மற்றும் வந்தவாசி தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

வந்தவாசி தொகுதியில் இக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.. அப்துல் வஹாப் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளரின் வெற்றிக்காகவும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகவும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே மத்திய சென்னை தொகுதியை .மா.கா. விற்கு விட்டுக் கொடுக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக மாநிலப் பிரிவு முடிவு செய்துள்ளதாகத் தலைவரும், வேட்பாளருமான காதர் மொகிதீன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு விலகிக் கொண்டுவிட்டார். வந்தவாசியில் மட்டுமே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும். மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் .மா.கா. தலைமையிலான மாற்று அணிக்கு ஆதரவாக செயல்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் பின்னணியில் மாறனின் முரசு ஒலியின் அளவை குறைப்பதற்கான சதி அரங்கேறுவதாகத் தி.மு.. வட்டாரம் கருதுகிறது. அப்துல் லத்தீப்புக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட முஸ்லிம் வாக்குகள் காதர் மொகிதீனின் வரவால் சிதறிவிடும் என்று முஸ்லிம் சமுதாயத்துப் பெரும்புள்ளிகளிடம் பரபரப்பான பேச்சு உலா வரத் தொடங்கியது.

எப்படியாவது காதர் மொகிதீனைப் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று ஒரு அணி தீவிரமான முயற்சியில் இறங்கியது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் ஹைதர் அலி, அமைப்பாளர் ஜெயினுலாபுதீன் ஆகியோர் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதிலும் இருந்த பல்வேறு முஸ்லிம் தலைவர்கள் காதர் மொகிதீனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். லத்தீப்பும் தோற்று, காதர் மொகிதீனும் தோல்வியுறும் வாய்ப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டி அவர் மனதை மாற்றியிருக்கிறார்கள்.

இதையடுத்தே காதர் மொகிதீன், தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். தி.மு.. பெரிதும் எதிர்பார்க்கும் முரசொலி மாறனின் வெற்றி வாய்ப்பு இதனால் பாதிக்கப்படும் என்று தி.மு.. தரப்பு கவலையடைந்துள்ளது. துணைப் பிரதமர், மத்திய அமைச்சர் என்று பதவிகளைப் பெறும் கனவில் உள்ள முரசொலி மாறனுக்கும் இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந் நிலையைச் சமாளிக்க தி.மு.. சார்பில் புது வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. மத்திய சென்னை தொகுதியில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி 12 லட்சத்து 80 ஆயிரத்து 221 (12,80,221) வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் இரண்டு லட்சத்திற்கும் சற்றே கூடுதலாக முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். மீதமுள்ள 10 லட்சம் வாக்காளர்களைக் குறி வைத்துத் தி.மு.. பிரச்சாரத்தில் குதிக்கிறது. இன்னமும் கூட முஸ்லிம் வாக்காளர்களில் ஒரு பிரிவினர் தி.மு.. வுக்கு வாக்களிக்கக் கூடும் என்று அக் கட்சி நம்புகிறது.

உள்ளுக்குள் சற்று பீதியடைந்திருந்தாலும், மாறன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மிக எளிதாக வெல்வார் என்றே தி.மு.. தொண்டர்கள் நம்பிக்கையோடு சொல்கிறார்கள்.

ஒரு வகையில் காதர் மொகிதீனின் விலகல் எங்களுக்கு நன்மையே செய்துள்ளது. எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று அசட்டையாக இருந்த தி.மு.. தலைவர்கள் இப் புதிய திருப்பத்தால் விழிப்படைந்துள்ளனர். தீவிரமான பிரச்சாரத்தில் எதிரிகளை வீழ்த்துவோம் என்கிறது மாறன் படை. மத்திய சென்னையில் புயல் மையம் கொள்கிறது.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக