ரியோ ஒலிம்பிக்சில் அனுபவ வீரர் லியாண்டர் பயஸ் - ரோகன் போபண்ணா இணைந்து விளையாடுவார்கள் என்று உரிய நேரத்தில் அறிவித்து பெரிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்திய டென்னிஸ் சங்கம். சர்வதேச டென்னிஸ் இரட்டையர் தரவரிசை பட்டியலில் 10வது இடம் பிடித்த போபண்ணா, பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். தனக்கு ஜோடியாக விளையாடும் வீரரை தேர்வு செய்யும் உரிமையும் அவருக்கு கிடைத்தது.
யாரை தேர்வு செய்யப் போகிறாரோ என்ற பரபரப்புக்கு இடையே, இளம் வீரர் சாகேத் மைனேனியுடன் இணைந்து ஒலிம்பிக் போட்டியில் களமிறங்க விரும்புவதாக இந்திய டென்னிஸ் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினார் போபண்ணா.அவரது கோரிக்கையை தொடக்கத்திலேயே நிராகரித்துவிட்ட டென்னிஸ் சங்கம், கடந்த 25 ஆண்டுகளாக சர்வதேச டென்னிசில் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் பயசுடன் ஜோடி சேர்ந்து விளையாடுங்கள் என அறிவுறுத்தியதுடன், ஒலிம்பிக் போட்டிக்கான அணியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சாதனை படைக்க வயது ஒரு தடையில்லை என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார் பயஸ். சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் சுவிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிசுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றது, 42 வயதிலும் அவரது ஆட்டத் திறனும் உடல்தகுதியும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதற்கு அத்தாட்சி.தனக்கான இணையை தேர்வு செய்யும் உரிமை போபண்ணாவுக்கு இருந்தாலும், பயசுடன் இணைந்து விளையாடினால் மட்டுமே பதக்க வாய்ப்பு அதிகம் என்று தேர்வுக் குழுவினர் தெளிவு படுத்தியுள்ளனர். மைனேனியுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்ற தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் போபண்ணா சோர்வடைய வேண்டிய அவசியம் இல்லை. அவரது விருப்பம் நியாயமானதாக இருந்தாலும் கூட,
தேர்வுக் குழுவினரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம்.தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்காமல், தாய்நாட்டுக்காக முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாடுவதே முக்கியம். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 8, கலப்பு இரட்டையர் பிரிவில் 10 என மொத்தம் 18 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பயசின் அனுபவத்துக்கு தற்போதுள்ள வீரர்களில் யாருமே ஈடாக மாட்டார்கள். கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பயஸ் - போபண்ணா ஒருங்கிணைந்து விளையாடினால் ஒலிம்பிக் பதக்கத்தை நிச்சயம் வசப்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக