ஞாயிறு, 4 அக்டோபர், 2015

ஒரு கானா முயற்சி!

அடங்…
அடங்குங்கடா
அடங்குங்கடா கொஞ்சம்அடங்குங்கடா!
அடங்குங்கடா கொஞ்சம்அடங்குங்கடா!
மண்ணாச பொன்னாச பெண்ணாச புடிச்சு
தலகால் புரியாம
ஆட்டம் போடும் மனுஷங்களா
அடங்குங்கடா கொஞ்சம் அடங்குங்கடா! (அடங்குங்கடா…)

மேசைக்கு கீழேதான் கையநீட்டிவாங்குறான்
செய்யுற கடமைக்குத்தான்
கூசாம லஞ்சம் கேக்குறான்
அடுத்தவன் பொண்டாட்டிய அடைய நெனைக்கிறான்
அக்கா தங்கச்சின்னு
பாகுபாடு இல்லாம பாக்குறான்(அடங்குங்கடா…)
எரியற கூரையில பிடுங்கித்தான் வாழுறான்
எல்லாமே எனக்குத்தான்னு சேத்துவைக்கிறான்

சுனாமி அலையில
மெதக்கும் பொணத்துல
ஏதாச்சும் கெடைக்குமான்னு
அலையும் ஜென்மங்களும்
இருக்குது பாருங்க! அட… (அடங்குங்கடா…)

நாட்டுல…
சாதிமத சண்டைக்கும் பஞ்சமில்லே
ஆண்டவன் கொடுத்த அந்த
ஆத்து தண்ணிக்கும் அடிதடிதான்
அட என்ன சொல்ல என்பாட்டுல (அடங்குங்கடா…)

அரசியல்சாக்கட
அட அதுக்கு முன்ன
கூவம் ஒரு பூக்கட!
ஊழல் பணத்துல
உல்லாச வாழ்க்கதான்
ஏழை வயித்துலதான் என்னாலும் ஈரத்துணி!...( அடங்குங்கடா)

எங்க வானம்
எங்க பூமியின்னு
எல்லைய பிரிக்குறான்
கடல் தண்ணி பரப்பில்கூட
கண்ணிவெடி வெதைக்குறான்!
அணுகுண்டுசோதனையின்னு
அதள பாதாளத்துல வேட்டு வைக்கிறான்
பூமி நடுங்கும்போது
பொளந்து விழுங்கும்போது
கடவுள் இல்லையா?
அவனுக்கு கண்ணே இல்லையான்னு
அழுது பொலம்புறான்… (அடங்குங்கடா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக